வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 மே, 2011

13வது சீர்திருத்தமும் அதற்கு மேலும் என்பதே எமது கட்சியின் நீண்டகால கொள்கைவழி! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

devaன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மக்கள் மட்டுமல்லாது கடந்தகால அழிவுயுத்தம் காரணமாகவும் இனக்கலவரங்கள் காரணமாகவும் உயிரிழந்த எமது மக்கள் நினைவு கூறப்படல் வேண்டும். அதேவேளை இனிமேலும் இவ்வாறான இழப்புகளோ வன்செயல்களோ இடம்பெறாமல் பாதுகாத்துக் கொள்வதே முக்கியமானது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி இடர்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் எமது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஆரம்பித்து படிப்படியாக அதற்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் நிலையில் 13வது திருத்தத்தைத் தாண்டிய தீர்வை நான் இப்போது வலியுறுத்தி வருவதாக ஒரு உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அறியாத்தனமாக இப்பத்திரிகை இப்படி எழுதி இருக்கிறது என்பதை எமது கொள்கை அறிந்த பலரும் அறிவர். 13வது சீர்திருத்தமும் அதற்கு மேலும் என்பதே எமது நீண்டகால கொள்கை நிலைப்பாடாகும். இதன் மூலமே எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற முடியும்.

சுயலாபங்களுக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ நான் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் என்பதுடன் மக்களின் வளமான எதிர்காலத்திற்காகவே தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விவசாய உற்பத்திகளை யாழ் மாவட்ட கொழும்புக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ரராஜபக்ச அனுமதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை துறைசார்ந்த அதிகாரிகள் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமெனவும் தெரிவித்தார்.

சந்தையின் சுத்தம் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதுடன் சட்ட வரம்பை மீறுவோர் மீதும் நடவடிக்கையெடுக்கப்படும். அத்துடன் கட்டாக்காலி மாடுகளால் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் இடர்பாடுகள் தொடர்பாகவும் பயிர்ச்செய்படாதுள்ள தரிசு நிலங்கள் விவசாயிகளுக்கான மானியங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.

தவிர சந்தைகளில் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் முகமாக தாம் விரைவில் சந்தைகளுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட பின்னரே இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அங்கு உரையாற்றிய ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் யாழ் மாவட்டத்திலுள்ள சந்தைகளின் விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்படுமென தெரிவித்தார்.

விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தச் செல்லும் போது சந்தைகளில் பொருட்களின் நிறைக்கேற்ப கழிவு என்ற சொல்லின் பிரகாரம் எதிர்நோக்கி வருகின்ற இடர்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த போதிலும் விவசாயிகள் மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமையினால் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கழிவுகள் இருந்தபோதிலும் சரியான நடைமுறைகள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் முழுமையான பலனையோ இலாபத்தையோ எட்ட முடியாத சூழல் தொடர்கிறது.

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள முக்கிய சந்தைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவற்றின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் சரியான சட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்மூலமே விவசாயிகளும் வியாபாரிகளும் மக்களும் நன்மையடைய வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்காட்டியதுடன் மாவட்டத்தில் இதுவரை இயங்க முடியாதுள்ள சந்தைகளை இயங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

முன்பதாக மண்டபத்தில் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கல்நதுரையாடலில் யாழ் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மதுமதி வந்தகுமார் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’