வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 மே, 2011

விஜேவீர, பிரபாகரன், மற்றும் பின் லாடன் ஆகியோரது மூன்று கொலைகள்

விக்டர் ஐவன்

மெரிக்காவின் முதல்தர எதிரியும், முழு அமெரிக்காவையும் கிடுகிடுக்க வைத்த பயங்கரவாதியுமான பின் லாடனை இறுதியில் அமெரிக்காவால் ஒருவழியாகக் கொல்ல முடிந்தது. சில காலங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவுகளால் பின் லாடன் பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத் எனுமிடத்திலுள்ள ஒரு மாளிகையில் மறைந்து வாழுவதைக் கண்டுபிடிக்க இயலுமாகவிருந்தது. கண்டுபிடிப்புகள் உறுதியாக்கப் பட்டதும், அமெரிக்காவின் ஜனாதிபதியும் மற்றும் அவரது சிரேஷ்ட உதவியாளர்களும் உலகின் மறுபக்கத்திலிருந்து வீடியோ ஒளித்திரைகளில் நடைபெறும் நடவடிக்கைகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் பின் லாடனை கொலை செய்யும் திட்டம் மேற்கொள்ளப் பட்டது.
கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் சீல் என அழைக்கப்படும் விசேட படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு கடற்படை உத்தியோகத்தர்களின் விசேடமான குழுவானது மூன்று உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்றின.

பாகிஸ்தான் அரசாங்கம் இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆலொசனை இல்லாமலே இத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட உலங்கு வானூர்திகள் பின் லாடன் மறைந்திருந்த வீட்டின் சுற்று வட்டத்தை அடைந்த பிறகு மாத்திரமே பாகிஸ்தான் அரசாங்கத்துக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.

இந்த நடவடிக்கையில் பின் லாடன் மற்றும் அப்போது அவ்வீட்டில் அவருடன் இருக்க நேர்ந்த மற்றவர்களும் இழப்பை எதிர்கொண்டனர். பின் லாடனைத் தவிர அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அவரது மகன்களில் ஒருவர், மற்றும் பின் லாடனின் மனைவியாக இருக்கலாம் எனக் கருதப்படும் பெண் ஒருவர் ஆகியோர் இந்நடவடிக்கையின் பொழுது கொல்லப்பட்டனர். மற்றும் இரண்டு பெண்கள் காயங்களுக்கு உள்ளானார்கள். கொல்லப்பட்ட பெண்ணை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதாலேயே அவர் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான ஒரு போருக்கும் மற்றும் மரபுவழியிலான யுத்த முறைக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை அமெரிக்கா பின் லாடனை கொலை செய்திருக்கும் இந்த நடவடிக்கையின் வெளிச்சத்தில் தெளிவாக விளக்கலாம்.

இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட உலங்கு வானூர்திகள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல் பாகிஸ்தானின் வான்பரப்பை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளன. பின் லாடனைக் கைது செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு எதுவும் பெறப்படவில்லை. அதற்குப் பதிலாக நடவடிக்கைக் குழுவினர் பின் லாடன் மறைந்திருந்த வீட்டுச் சுற்றுப்புறத்துக்குள் புயல்போல் நுழைந்து அங்கிருந்த மனிதர்கள் எல்லோரையும் கொன்றிருக்கிறார்கள். இந் நடவடிக்கையில் ஒரு பெண் கொல்லப் பட்டதுடன் மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பின்லாடனின் உயிரற்ற உடலை அவரது உறவினர்களிடம் கையளிக்கவில்லை.

சிலவேளைகளில் அவர்கள் விரும்பியிருந்தால் இந்த நடவடிக்கையில் பின் லாடனை உயிரோடு ஒரு கைதியாகப் பிடித்திருக்க முடியும். அதில் சொல்லப்பட்டது என்னவெனில் அவருக்கு சரணடைவதற்குரிய ஒரு தெரிவு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதற்கு உடன்பட மறுத்தபடியால் அவர் கொல்லப்பட்டார் என்று. இருந்தாலும் இது நம்புவதற்கு கடினமான ஒரு கதை. இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டதே அவரைக் கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்துடன்தான் என்பது மிகத் தெளிவு. சிலவேளைகளில் பின் லாடன் ஒரு கைதியாகவேனும் உயிரோடு இருந்தால் அது பின் லாடன் இறப்பதைக் காட்டிலும் அதிக பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று முன்கூட்டியே கணக்குக் கூட்டப் பட்டதால்தான் அது அவர்களை பின் லாடனைக் கொலை செய்வதற்குச் சாதகமான முடிவெடுக்க அவர்களைத் தூண்டியிருக்கலாம். இத்தகைய முடிவுக்கு வருவது சரியானதே.

ஜேவிபியினரது இரண்டாவது கிளர்ச்சியின்போது இரத்தம் படிந்த கரங்களையுடைய ஜேவிபி போராளிகளையும் மற்றும் அவர்களின் தலைவர்களையும் நசுக்குவதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கையாண்ட கொள்கையும் கிட்டத்தட்ட பின் லாடன் விடயத்தில் அமெரிக்கா பின்பற்றியதற்குச் சமமானதே. 1988 ஜனாதிபதித் தேர்தலின்பின் உடனடியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தடுப்புக் காவலில் இருந்த சுமார் 1800 ஜேவிபி சந்தேகநபர்களை அவர்களின் மனச்சாட்சிமீது நம்பிக்கை வைத்து அவர்களை விடுதலை செய்தார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் கூட்டமாக விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து திரும்பவும் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஜனாதிபதியால் கடைப்பிடிக்கப் பட்ட கொள்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் எழுச்சிபெற வைத்தது. இந்தச் சம்பவத்தின் மூலம் ஜனாதிபதி கசப்பான பாடம் ஒன்றை படிக்கவேண்டி நேர்ந்தது. அதன்பிறகு அவர் கிளர்ச்சிகளை ஒடுக்க மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடுகளை செலுத்தாமல் நடுநிலை வகிக்கும் கொள்கையைக் கடைப்பிடித்ததோடு பாதுகாப்பு படையினரையே முடிவுகளை எடுக்க அனுமதித்தார்.

இந்தக் கிளர்ச்சியோடு எதுவித தொடர்புமற்ற எம்பிலிப்பிட்டி மாணவர்களின் சித்திரவதை போன்ற ஒன்றிரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற கொலைகளைத் தவிர உண்மையில் இந்த ஜேவிபி கிளர்ச்சியின்போது பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்களின் கரங்கள் இரத்தக்கறை படிந்தவையாகவே இருந்தன. பாதுகாப்பு படையினர் தங்கள் குடும்ப அங்கத்தவர்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராட வேண்டியிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினரை பிடிக்க முடியாத சந்தர்ப்பங்களின் போதெல்லாம் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் குடும்ப அங்கத்தவர்களை கொலை செய்யும் ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்தினார்கள். இதன் விளைவாக இருபகுதியினரும் ஒருவகை வஞ்சம் தீர்க்கும் உணர்வுடனேயே போரிட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் போரின் வெற்றி முற்றாகத் தங்கியிருந்தது, ஒரு பகுதியினரின் திறமை எதிராளியின்மீது செலுத்தப்படும் பொங்கிப் பெருகும் ஆக்ரோஷம் மற்றும் குரூரம் என்பன எதிரியின் சக்தியை விட மிதமிஞ்சி இருப்பதிலேயே. இதன்படி கிளர்ச்சியின் தன்மை எதிர்மாறாக அதை ஒடுக்கும் தன்மையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

விஜேவீர கொல்லப்பட்டது அவரைக் கைது செய்யப்பட்ட பின்பே. விஜேவீர மட்டுமல்ல அநேக ஜேவிபி முன்னணித் தரப்பினர், கமநாயக்கா மற்றும் கீர்த்தி விஜயபாகு என்கிற புனைபெயரின் கீழ், எழுத்து மூலமான கட்டளைகளை வழங்கி வந்த சமன் பியசிறி போன்றவர்களும் கொல்லப்பட்டது அவர்களைக் கைது செய்த பிறகே. ஜேவிபி தலைவர்களைப் பொறுத்தமட்டில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை, அமெரிக்கப் படைகள் பின் லாடனை கையாண்ட விதத்திலிருந்து மாறுபடும் ஒரே தன்மை என்னவெனில் ஸ்ரீலங்காப் படைகள் அவர்களைக் கைது செய்த பின்பு கொன்றார்கள் அதேவேளை பின் லாடன் கைது செய்யப்படாமல் கொல்லப்பட்டார் என்பது மட்டுமே. எந்த நாடும் பயங்கரவாதத்தை நசுக்குவதற்காகக் கடைப்பிடிக்கும் கொள்கையாக இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி ஒபாமா பின் லாடன் மரணத்தின் பின் நிகழ்த்திய வரலாற்றுப் புகழ் மிக்க உரையில் உறுதிப்படுத்தியது தனது நாட்டைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அமெரிக்க மக்களின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும்போது அவர்களைப் பாதுகாப்பதற்கு தனக்குள்ள உரிமையைப் பற்றியே. பின் லாடனைக் கண்டு பிடிக்கும் தனது முயற்சியில் அமெரிக்கா பின் லாடனைப் பாதுகாத்து வந்த ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தைக் கூடச் செய்ய வேண்டி ஏற்பட்டது என்று கூட அவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். பின் லாடன் எழுப்பிய சவாலுக்கு பதிலளிக்க வேண்டி அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை மட்டும் வீழ்த்தவில்லை, அது ஈராக்கில் கூட ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த முயற்சியில் இதன் விளைவாக உருவான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா ஆயிரக்கணக்கான மக்களை கொன்றது.

அமெரிக்காவுக்கு மட்டுமல்ல தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாத இயக்கங்களை தோல்வியுறச் செய்வதற்கு எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு. மிகச் சிறிய நாடான ஸ்ரீலங்காவுக்குக்கூட இதற்கு உரிமை உள்ளது. பின் லாடனின் பயங்கரவாத வெளிப்பாடு அமெரிக்காவில் சுமார் 3000 மக்களைத்தான் கொன்றது. ஆனால் பிரபாகரனின் பயங்கரவாத வெளிப்பாடு 50,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. எல்.ரீ.ரீ.ஈ பாரிய எண்ணிக்கையில் பௌத்த மற்றும் இஸ்லாமிய மத விசுவாசிகளை முறையே அவர்கள் விகாரைகளிலும் மசூதிகளிலும் வழிபாடுகள் நடத்திக் கொண்டிருந்த வேளைகளில் அவர்களை கொன்றொழித்தது.

பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தின்போது கிழக்கு மாகாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரிடம் சரணடைந்த சுமார் 400 வரையான காவல் துறையினரை எல்.ரீ.ரீ.ஈ கொடூரமாகக் கொலை செய்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை எல்.ரீ.ரீ.ஈ வடக்கிலிருந்து வெளியேற்றி அவர்களின் உடமைகளையும் சூறையாடியது. முதலாவது சுற்றுப் பயங்கரவாதத்தின்போது எல்.ரீ.ரீ.ஈ தங்களது அதே குறிக்கோளுக்காகப் போராட்டம் நடத்திய தமிழ் குழுக்ககளின் பெருமளவு தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் ஈவு இரக்கமின்றிக் கொன்றது.

ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்திருந்த தமிழ் தலைவர்களைக்கூட எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்துள்ளது. ஈழத்துக்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ள பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. அவர் இந்தியாவுக்கு ஒரு தற்கொலை குண்டுதாரியை ஏவி ராஜீவ் காந்தியை கொலை செய்வித்தார், ஈழத்துக்கு குறைவான தீர்வினை காண்பதற்காக காந்தி மேற்கொண்ட சமரசத்துக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக. இப்படியாக பிரபாகரன் சட்டபூர்வமான ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு ராட்சச அச்சுறுத்தல்களை எழுப்பி அதற்கு சவால் விடுத்ததுடன் அதன் இருப்புக்கும் பயங்கர தடைகளை உண்டாக்கினார். பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈ, உலகத்தில் எவ்விடத்திலாவது தோன்றிய பயங்கரவாத கருவினைக் கொண்ட தொகுதியைக் காட்டிலும் மிகக் கொடூரமானதும் மற்றும் நச்சுத் தன்மையானதுமாகும்.

அமெரிக்காவிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்லாது ஸ்ரீலங்காவில் உள்ளவர்களுக்கும் அத்தகைய தன்மை கொண்ட பயங்கரவாதக் குழுக்களை தோல்வியுறச் செய்யும் உரிமை உள்ளது. அளவிலும் ஆக்ரோசத்திலும் போட்டிபோடும் ஒரு பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்தும்போது, மிகக் குறைந்த பூச்சிய அளவிலான மீறல்களை எந்த நாட்டினாலும் உறுதிப் படுத்த முடியாது. குறிப்பிட்டளவு அப்பாவி மக்கள் அதன்போது பலியாவது அதில் மேலும் தவிர்க்க முடியாதது. அது எத்தகைய போர்ச்சூழலிலும் இயற்கையானதும் மற்றும் தவிர்க்க முடியாத ஒன்றுமாகும். அல்கைதா இயக்கத்தை தோல்வியடையச் செய்வதில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் பணம் மற்றும் மனித உயிர்களின் பெறுமானத்தோடு ஒப்பிடுகையில் ஸ்ரீலங்காவுக்கு ஏற்பட்டிருப்பது அதன் ஒரு சிறிய பின்னம் மாத்திரமே. அமெரிக்காவால் பின் லாடன் உட்பட ஒரு சிறிய எண்ணிக்கையிலான அல்கைதாத் தலைவர்களைக் கொல்ல முடிந்தாலும்கூட அதனால் முழு அல்கைதா இயக்கத்தினரையும் தோற்கடிக்க இயலவில்லை. இதன் முரண்பாடாக ஸ்ரீலங்காவால் முழு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தையுமே தோற்கடிக் முடிந்திருக்கிறது.

பின் லாடனைக் கொல்வதற்காக செயற்hடுத்தப்பட்ட திட்டத்தின் விளைவாக அந்த வளவுக்குள் இருந்த எல்லோருமே கொல்லப் பட்டோ அல்லது காயமடைந்தோ இருக்கிறார்கள். மனிதக் கேடயமாகக் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பெண் கூடக் கொல்லப் பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவம் பிரபாகரனுடனும் அவரது இராணுவத்துடனும் போரிட்டபோது எல்.ரீ.ரீ.ஈ மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட மிகப் பெரிய சனத்தொகையை மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்தது. தருஸ்மான் அறிக்கைகூட எல்.ரீ.ரீ.ஈ கனரக ஏவுகணைகளை தங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கேடயமாக அமைக்கப் பட்ட இடத்தில் வாழ்ந்த பொதுமக்கள் மத்தியில் கூட நிறுவியிருந்ததாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த அறிக்கை மேலும் ஏற்றுக்கொள்வது பாதுகாப்பு படையினரிடம் சரணடைய முயன்ற பொதுமக்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக. இரு;தாலும் தருஸ்மான் அறிக்கையில் சொல்லப்படாதது, எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்கள் பகுதியிடையே தற்கொலை குண்டுதாரிகளை ஊடுருவச் செய்து சரணடைய முயலும் பெரிய அளவிலான பொதுமக்களை பல சந்தர்ப்பங்களில் தற்கொலை குண்டுதாரிகளை வெடிக்கவைத்து அதன் மூலும் கொலை செய்ததை

உண்மையில் மூன்று இலட்சம் பொதுமக்களை மிகக் குறுகிய சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுள்ள மட்டுப் படுத்தப்பட்ட இடத்துக்குள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்திருக்காவிட்டால் முன்பு எழுந்த போர் அங்கு ஒருபோதும் இடம் பெற்றிருக்காது. இந்தப் புதிய மற்றும் தனித்தன்மையான அனுபவம் உலக யுத்த சரித்திரப் பக்கங்களில் சந்தேகமில்லாமல் இடம் பெறும்.

நாட்டில் உள்ள தமிழ் சனத் தொகையின் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே வடபகுதியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். அந்தப் பகுதியை விட்டு வெளியேறக்கூடிய அனைவரும் நாட்டின் மற்றப் பகுதிகளுக்கோ அல்லது மேற்கின் பசுமைப் பிரதேசங்களைத் தேடியோ போய்விட்டார்கள். உண்மையில் ஏழ்மையான குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகள் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்திருந்த படியினாலும் மற்றும் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் சில காரணங்களுக்காக எல்.ரீ.ரீ.ஈ யினருடன் சில தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காரணத்தாலும் அங்கு மீதமாக இருந்தனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களைக் கொண்டு எல்.ரீ.ரீ.ஈ ஒரு பொதுமக்கள் பாதுகாப்புப் படையையும் ஏற்படுத்தியிருந்தது. அவர்களுக்கு யுத்த நிலை சம்பந்தமான பகுதிப் பயிற்சியும் வழங்கப் பட்டிருந்தது. இந்தக் காரணத்தை வைத்து நோக்கும்போது எல்.ரீ.ரீ.ஈ தனது பாதுகாப்புக்காக மனிதக் கேடயமாக பயன்படுத்திய அனைவரையுமே உலகின் நியாயத்தின் முன்னால் பொதுமக்கள் சனத்தொகை என வகைப் படுத்த முடியாது.

டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களால் ஒரு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு பிரசுரித்திருப்பதன்படி, எல்.ரீ.ரீ.ஈ யுத்தம் வெடித்த சமயத்தில் சுமார் 30,000 போராளிகளை தன் வசம் வைத்திருந்தது. போர் நிகழ்ந்த பகுதிகளில் 17 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் சுமார் 165 உள்நாட்டு ஊழியர்களும் போர் முடிவடையும் காலம் வரையிலான முழுக் காலகட்டத்திலும் அங்கு வசித்துள்ளார்கள். பொதுமக்களை கண்மூடித் தனமாகவும் அரக்கத் தனமாகவும் தாக்கும் ஒரு கொள்கை கடைப்பிடிக்கப் பட்டிருக்குமாயின் குறைந்தது இந்த ஊழியரின் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்காவது இழப்புக்கள் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அவர்களும் பொதுமக்கள் மத்தியில் வாழ்ந்தவர்கள் ஆனால் அப்படியான சம்பவங்கள் எதுவும் அறிவிக்கப் படவில்லை.

எல்.ரீ.ரீ.ஈ மீது அனுதாபமுள்ள தமிழ் புலம் பெயர்ந்தவர்கள்தான் பெரிதாக அழுது கூக்குரலிட்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறார்கள். அவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பகுதியினர்தான் தங்களது அளவற்ற பங்களிப்பை வழங்கி உறுதியான இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யினை அதன் இறுதியான தோல்வியினை அடையும்படி செய்தார்கள்.

அவர்கள் உண்மையான காரணிகளையும் ஸ்ரீலங்காவின் யதாhத்த நிலையினையும் முற்றாகப் புறந்தள்ளி விட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ யின் நடவடிக்கைகளில் உள்ள நல்ல மற்றும் தீய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்கவோ கண்காணிக்வோ ஒருபோதும் முயன்றதில்லை. இப்படியாக இறுதியான பகுப்பாய்வின்படி எல்.ரீ.ரீ.ஈ ஸ்ரீலங்காவில் வாழ்ந்த தமிழ் மக்களின் ஆதரவில் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஆனால் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் பாரிய அளவிலான நிதி ஆதரவினை அவர்களுக்குப் பாய்ச்சினார்கள். இதன் விளைவாகத் தனது உண்மையான பலத்தை விட மிகவும் நவீனரக ஆயுதங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு இயக்கமாக எல்.ரீ.ரீ.ஈ மாற்றம் பெற்றது. மேலும் இறுதியாக அது மக்களின் சக்தியைவிட ஆயுதத்தின் சக்தியையே நம்பும் ஒரு பயங்கரவாத இயக்கமாக மாறிவிட்டது.

தமிழ் புலம் பெயர் சமூகத்தினரால் செலுத்தப்பட்ட செல்வாக்கின் அழுத்தம் காரணமாகத்தான் எல்.ரீ.ரீ.ஈ ஈழத்துக்கு குறைவான எந்த ஒரு தீர்வையும் நிராகரகரிக்கும் கடினமான கொள்கையைப் பின்பற்றி வந்தது. இந்தக் கருத்தின்படி பார்த்தால் மேற்கில் உள்ளதமிழ் புலம் பெயர் சமூகத்தினரின் பெரும் பாதிப்பு காரணமாகவே எல்.ரீ.ரீ.ஈ இறுதியில் வேரோடு அழிக்கப் பட்டது.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் இயக்கவியல்புகள் மற்றும் மரபுரீதியான யுத்த நடைமுறைகளும் முற்றிலும் வித்தியாசமானவை. அரசாங்கப் படையினருக்கு எதிராளியை அவர்கள் வௌ;வேறு சமயங்களில் வௌ;வேறுபட்ட தோற்றங்களிலும் வடிவங்களிலும் தோன்றுவதால் அவர்களை இனங்காணுவது அத்தனை சுலபமல்ல. அவர்கள் சீருடைகளில் தோன்றும் வேளைகளைத் தவிர மற்ற நேரங்களில் சாதாரண பொதுமக்களின் உடைகளிலேயே இருப்பார்கள்.

அவர்கள் தாக்குதல் நடத்தும் சமயங்களில்தான் அவர்களைப் பார்க்க முடியும். அதே வேளை எதிரிகளைப் பார்க்க முடியாத சமயங்களில் அவர்கள் தாக்குவதற்கு மறைவாகப் பதுங்கி இருப்பார்கள். பயங்கரவாதிகள் சட்டங்களுக்கோ நீதியின் தரங்களுக்கோ அல்லது மரபுகளுக்கோ மதிப்பளிக்க மாட்டார்கள். மற்றும் தங்கள் இலக்குகளை அடைவதற்காக சமூகத்தை அச்சுறுத்தி, ஆயிரக் கணக்கான மக்களைக் கொலை செய்தல் மற்றும் அங்கவீனப் படுத்துதல் பொன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். சிலவேளைகளில் எதிரி அப்பாவி பொதுமகன் வடிவத்தில் காட்சிதரும் ஒரு மனித வெடிகுண்டாகவும் இருப்பான்.இத்தகைய எதிர் தரப்புடன்தான் சட்டப+ர்வமான இராணுவம் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப் படுகிறது.

இதுவரை ஒரு சுதந்திரமான நாட்டில் சட்டபூர்வமான இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு போரில் எப்படிப் போராடவேண்டும் என ஐநா இதுவரை தீர்மானம் செய்யவில்லை. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஏற்ற பொருத்தமான நடைமுறைகளுக்கான கொள்கைகள் இதுவரை வரைவு செய்யப் படவில்லை. தருஸ்மான் அறிக்கை மற்றும் அதைத் தொகுத்த நிபுணர் குழுவினர் உண்மையில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தில் உள்ளடங்கிய இயக்கவியல்புகளை கணக்கில் கொள்ளவில்லை.

மேற்சொன்ன கருத்துக்களின்படி மரபுவழி யுத்தங்களுக்காக வரையறுக்கப் பட்டிருக்கும் வழிகாட்டல்களும் மற்றும் தத்தவங்களும்அதேபடி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தங்களுக்கும் பொருந்தும் என ஐநா நம்புமாகவிருந்தால்,ஐநாவை சட்டபூர்வமான நாடுகளின் உறுதிப்பாட்டைப் பாதுகாக்கும் ஒரு சர்வதேச அமைப்பாக விளக்க முடியாது,ஆனால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு என்று விளக்கலாம்.

அத்தகைய ஒரு தோற்றத்தின் உருவாக்கம் பொதுவாக ஐநா,அதன் அங்கத்துவ நாடுகள், மற்றும் உலகம் என்பனவற்றுக்கு நல்லதல்ல என்று முன்கூட்டியே தெரிவிக்க முடியும்.

இந்தச் சூழ்நிலையின் கீழ் ஜனாதிபதி ஒபாமாவினால் வழிநடத்தப்படும் அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்தின் பாதிப்பினால் அடிபட்டிருந்தும் கூட ஸ்ரீலங்காவின் பிரச்சனைகளை அதன் சரியான கண்ணோட்டத்தில் கருதுவதற்குத் தவறியிருப்பது மிகவும் துர்ப்பாக்கியமே.

(விக்டர் ஐவன் ராவய செய்திப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’