வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 மே, 2011

குடிநீர் வசதிகளை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் பாராட்டு

ர்காவற்துறை கிழக்குப் பகுதிக்கு குடிநீரைப் பெற்றுத் தருவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அக்கறைக்கும் கரிசனைக்கும் மக்கள் பிரதிநிதிகள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
ஊர்காவற்துறை பிரசேத ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்றைய தினம் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போதே மக்கள் பிரதிநிதிகள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச மக்கள் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன் பிரகாரம் குறிப்பிட்ட பிரதேசத்தில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதில் குறிப்பாக பெற்றோலைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது.

எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் ஊடாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதுவரை மின்சாரம் கிடைக்கப் பெறாத பகுதிகளுக்கு வடக்கின் வசந்தம் மூலம் மின்சாரம் கிடைப்பதற்கும் தெரு விளக்குகளைப் பொருத்துவதற்கும் நடவடிகை மேற்கொள்ளப்படும் என்பதுடன் அனலைதீவுக்கு அரை மணிநேரம் மேலதிகமாக மின்சேவை வழங்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் உறுதிமொழி வழங்கினார்.

இதனிடையே அங்குள்ள 18 பாடசாலைகளில் 15 பாடசாலைகள் தற்போது இயங்கி வருவதாகவும் 3 பாடசாலைகள் இயங்காதிருப்பதாகவும் இவற்றில் மேலும் இரண்டு பாடசாலைகளை இயக்குவதற்கும் சென் அன்ரனிஸ் கல்லூரியில் கணிதத்துறையையும் விஞ்ஞானத்துறையையும் உடனடியாக ஆரம்பிப்பதற்கும் அமைச்சர் அவர்கள் தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபா செலவில் பனங்கட்டி தொழிற்சாலையை நிறுவுவதற்கு ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ள நிலையில் விரைவில் ஏனைய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அங்கு பனந்தோப்புகள் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் போது ஊர்காவற்துறை கிழக்குப் பகுதிக்கு குடிநீரை பெற்றுத் தருவதற்கு அமைச்சர் அவர்களின் அயராத உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் தாம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டவர்களே என அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் தமது செஞ்சார்ந்த நன்றிகளை அமைச்சர் அவர்களுக்கு தெரிவித்தனர்.

இதனிடையே ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் 2000 தென்னங் கன்றுகளை வீடுகளில் நடுகை செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அவர்கள் உறுதிமொழி வழங்கினார். மக்களின் கோரிக்கைகள் தேவைகள் தொடர்பில் துறைசார்ந்தோருடனும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) பிரதேச செயலர் சிறிமோகன் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சரவணபவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’