இ றுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைய முன்வந்தபோதும் இலங்கை அரசாங்கம் அதை மறுத்து விட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு அனுமதிக்குமாறு அமெரிக்கா வழங்கிய அழுத்தத்தை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 'நாம் அந்த கட்டத்திற்கு அப்பாலுள்ளோம்' எனத் தெரிவித்து மறுத்தார் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்- யுத்த வலயத்திற்கு செல்வதற்கு விடுத்த வேண்டுகோளும் நிராகரிக்க்பபட்டதாக அமெரிக்க கேபிள் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டதாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நடுநிலையாளர்களான மூன்றாம் தரப்பினரிடம் எந்தவித நிபந்தனைகளுமின்றி விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு தயாராகவுள்ளதாக கேபி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனிடமிருந்து கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அமெரிக்கத் தூதுவருக்கு நோர்வே தூதுவர் கூறியதாக அமெரிக்க கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வே பத்திரிகையான அவ்ரன்போஸ்டன் செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற வேளையில் குமரன் பத்மநாதன் வெளிநாட்டில் தங்கியிருந்தார்.
அமெரிக்கத் தூதுவர் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார். அவர்கள் இந்த சரணடைதலுக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்காக இராணுவ ஹெலிகொப்டர் மூலம் யுத்த வலயப் பகுதிக்கு செல்வதற்கு தமது ஊழியர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்தனர்.
இதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்தார். இருப்பினும் சரணடையவுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை முதலில் தெரியப்படுத்த வேண்டுமென அவர் கேட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவுக்குத் தலைமை தாங்கிய போல் கஸ்ரெல்லாவை கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள் குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஆனால் நோர்வேயின் முயற்சிகளின் மத்தியிலும் அத்தகைய அந்த பட்டியலை வழங்க விடுதலைப் புலிகள் தவறிவிட்டனர்.
இறந்த மற்றும் காயமடைந்த பொதுமக்களை கொண்ட யுத்த வலயத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அனுமதிக்குமாறு அமெரிக்கா தொடர்ச்சியாக கோரியபோதிலும் இலங்கை அரசாங்கம் அதை நிராகரித்துவிட்டது எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’