வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 மே, 2011

ஒசாமா கொல்லப்பட்டபோது நிராயுதபாணி: வெள்ளை மாளிகை அறிவிப்பு

ல் குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடன் சுட்டுக்கொல்லப்பட்டபோது அவர் நிராயுதபாணியாக இருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரிலுள்ள வீடொன்றில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விசேட படையினரால் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவ்வேளையில் ஒபாமா ஆயுதம் எதுவுமின்றி இருந்ததாகவும் ஆனால் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இத்தாக்குதலின்போது பின்லேடன் ஆயுதத்துடன் காணப்பட்டதாகவும் அவரின் மனைவியை மனிதக் கேடயமாக பயன்படுத்தியதாகவும் முன்னர் வெளிவந்த தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜே கார்னி இது தொடர்பாக கூறுகையில், பின்லேடனை கைது செய்வதற்கு அல்லது கொல்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டதாக கூறினார்.

' இரு ஹெலிகொப்டர்கள் மூலம் அமெரிக்கப் படையினரால் இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவினர் மேற்படி வளாகத்தை ஒழுங்குமுறைப்படி சுத்தரிகரித்தனர். பின்னர் அறை அறையாக நகர்ந்தனர். 40 நிமிடங்கள் இம்முற்றுகை நீடித்தது. இந்நடவடிக்கை முழுவதும் அவர்கள் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொண்டனர்;. தாக்குதல் படையினரால் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்' என ஜே கார்னி தெரிவித்தார்.
இத்தாக்குதலின்போது பின் லாடனுக்கு 'ஜெரோனிமோ' என இரகசிய குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமாவின்புகைப்படங்களை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அது அச்சமூட்டும் புகைப்படம் எனவும் ஜே கார்னிதெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’