வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 மே, 2011

மதுபான விளம்பரம்: டோனிக்கு எதிராக பசுமை தாயகம் போராட்டம்-50 பேர் கைது

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மதுபான விளம்பரங்களில் நடிப்பதைக் கண்டித்து சென்னையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அவர் தங்கிருந்த 5 நட்சத்திர ஹோட்டல் எதிரே போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மெக்டோவல் மதுபான நிறுவனம் டோணியுடன் பல நூறு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விளம்பரம் டிவி, பத்திரிக்கைகள், இன்டர்நெட்டில் வெளியாகி வருகிறது.
இதற்கு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக டோணிக்கு அவர் கடிதமும் எழுதியிருந்தார்.
இந் நிலையில் மதுபான விளம்பரத்தில் இருந்து டோனி விலக வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பினர் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தங்கியுள்ள அடையார் பார்க் ஷெரட்டன் ஹோட்டல் முன் திரண்டனர். அங்கு தங்கியிருந்த டோனிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் இரா.அருள் உள்பட 50 பேரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’