வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 மே, 2011

திருமண ஜோடிகளுக்கு கட்டாய இரத்த பரிசோதனை?

லசீமியா நோய் பரவுதலை தடுப்பதற்காக திருமணம் செய்யவுள்ள ஜோடிகளுக்கு இரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார். தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குருநாகல் பொது வைத்தியசாலையில் தேசிய தலசீமியா நிலையத்தினால் கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க கூறினார்.

1,600 தலசீமியா நோயாளிகள் நாட்டில் காணப்படுவதாகவும் இதில் 160பேர் சிறுவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை மாற்ற முடியாது. இதற்க வாழ்நாள் முழுதும் மருந்து வழங்க வேண்டும். இந்த நோயாளிகளை தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.
இந்த நோயை கட்டுப்படுத்துவதற்குள்ள ஒரேயொரு வளி தலசீமியா காவிகளாகவுள்ள இருவர் திருமணம் செய்வதை தடுப்பதாகும். பெற்றோர் இருவரும் தலசீமியா காவிகளாக இருப்பின் பிள்ளைகள் நிச்சயமாக தலசீமியா நோயாளிகளாக வருவர் என்றும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகளுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் தலசீமியா நோய்க்கான இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் தலசீமியா நோய்க்காவிகள் இருவர் திருமணம் செய்வதை தடுக்க முடியும். சுகாதார அமைச்சு ஆண்டுதோறும் 350 மில்லியன் ரூபாவை தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக செலவளித்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’