அ ச்சமூட்டும் நிலையிலுள்ள பின்லேடனின் சடலத்தின் புகைப்படங்களை தான் வெளியிடப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதை நாம் வெற்றிக் கிண்ணங்கள் போல் காட்சிப்படுத்த மாட்டோம்' என தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அதேவேளை தலையில் சுடப்பட்ட ஒருவரின் கிறபிக்ஸ் படத்தை வன்முறைகளைத் தூண்டுவதற்கான ஊக்கியாக அல்லது பிரசாரக் கருவியாக பயன்படுத்தாதிருப்பதை தான் உறுதிப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
புகைப்படங்கள், முகத்தை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பம், மரபணு சோதனை என்பனவற்றின் மூலம் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர் ஒசாமா தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அமெரிக்காவின் சி.பி.எஸ் தொலைக்காட்சியின் "ஸ்டீவ் குரொட் ஒவ் 60 மினிட்ஸ்" எனும் நிகழ்ச்சியில் ஒபாமா தெரிவித்த தகவல் பின்வருமாறு:
கேள்வி: அந்த படங்களை நீங்கள் பார்த்தீர்களா?
ஒபாமா: ஆம்.
கேள்வி: அவற்றைப் பார்த்தபோது உங்கள் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது?
ஒபாமா: அது அவர் தான்.
கேள்வி: ஏன் அவற்றை நீங்கள் வெளியிடவில்லை:
ஒபாமா: உங்களுக்குத் தெரியும். உள்ளக ரீதியில் நாங்கள் கலந்துரையாடினோம். அது அவர்தான் என்பதை நாங்கள் உறுதியாக நிச்சயப்படுத்தினோம். டீ.என்.ஏ. சோதனை நடத்தினோம். நாங்கள் கொன்றது ஒசாமா பின் லாடனைத்தான் என்பதில் சந்தேகமில்லை.
தலையில் சுடப்பட்ட ஒருவரின் புகைப்படங்களை வன்முறைகளுக்கான ஊக்கியாக அல்லது பிரசாரக் கருவியாக பயன்படுத்தப்படுவதை நாம் விரும்பவில்லை. இவற்றை ஒரு வெற்றிக்கிண்ணம்போல் நாம் காட்சிப்படுத்த விரும்பவில்லை.
விடயம் என்னவென்றால், ஒருவருக்கு அவருக்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைத்துள்ளது. அவர் போய்விட்டார் என்பது குறித்து அமெரிக்கர்களும் உலகெங்குமுள்ள மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் நாம் இந்த கால்பந்தில் துளையிட விரும்பவில்லை. இப்படங்களின் தன்மையானது, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சிலவற்றை ஏற்படுத்தும் என நான் எண்ணுகிறேன். இது தொடர்பாக பொப் கேட்ஸ் (பாதுகாப்புச் செயலர்) ஹிலாரி கிளிண்டன், எனது புலனாய்வுக் குழுவினர் ஆகியோருடன் நான் கலந்துரையாடினேன். அவர்கள் இதை ஏற்றுக்கொண்டனர்.
கேள்வி: பாகிஸ்தானிலுள்ள மக்கள் சிலர் இவை அனைத்தும் பொய். இது அமெரிக்கர்களின் தந்திரம். ஓசாமா இறக்கவில்லை எனக் கூறுகின்றனரே.
ஒபாமா: உலக ரீதியான பிரதிபலிப்பை நாம் அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. பின் லேடன் இறந்ததில் சந்தேகமில்லை. நிச்சயமாக, அவர் இறந்துவிட்டார் என்பதில் அல் குவைதா அங்கத்தவர்களிடம் சந்தேகம் கொண்டவர்களும் உள்ளனர். சந்தேகமில்லாதவர்களும் உள்ளனர்.
ஆனால் ஒரு புகைப்படம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தும் என நாம் கருதவில்லை. அவற்றை நிராகரிக்கும் சிலர் இருப்பர். உண்மை என்னவென்றால் பின் லேடன் இந்த உலகில் நடமாடுவதை நீங்கள் இனி பார்க்கப்போவதில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’