பி ரபாகரன், பின்லேடன் ஆகிய இருவருமே உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதிகள் என ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளதை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது.
இவரின் கூற்று பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் அரசாங்க வானொலியொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள பிளேக், இன்று (நேற்று புதன்கிழமை) ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது அவர், பிரபாகரனும் பின்லேடனும் இரக்கமில்லாத பயங்கரவாதத் தலைவர்களாக சரித்திரத்தில் இடம்பெறுவர் என்று கூறினார்.
ஒசாமா நேரடியாக அமெரிக்காவைக் குறிவைத்து தாக்கினார். எனவே அவரைப் பிடிப்பது எமது அதிமுக்கியத் தெரிவாக இருந்தது. அவரது மரணம் அல்கொய்தாவுக்கு எதிரான எமது நீண்ட போரில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும் எனக் கூறினார்.
பிரபாகரனும் இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என குறிப்பதில் முன்னின்ற நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சகல முயற்சிகளுக்கும் நாம் எமது ஆதரவை தொடர்ந்து வழங்கி வந்தோம் என பிளேக் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’