வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 மே, 2011

ராஜீவ் காந்தி கொலையாளிகள் புதுடில்லியில் : த.பாண்டியன்

ந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை விசாரணையை மீண்டும் ஆரம்பித்து உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் த.பாண்டியன் நேற்று முன்தினம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரு வெற்றிபெற்றுள்ள நிலையில் அக்கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இக்கோரிக்கையை விடுத்துள்ளது.
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையை நேரில் கண்டவர்களில் ஒருவரான த.பாண்டியன், முள்ளிவாய்க்கால் அனர்தத்தின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் இது தொடர்பாக கூறுகையில், உண்மையான குற்றவாளிகள் புது டில்லியில் இருக்கிறார்கள். பி.சிதம்பரம் (இந்திய உள்துறை அமைச்சர்) இவை அனைத்தையும் அறிவார் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுகு;கு நீதிவழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மதிமுக தலைவர் வைகோ, ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பி.நெடுமாறன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் கணவர் எம். நடராஜன் ஆகியோர் இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் உணர்வற்றிருப்பதாக குற்றம் சுமத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’