வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 மே, 2011

உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண்

லகில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் வயதான நபராக பிரேசிலை சேர்ந்த 114 வயதான மரியா கோமஸ் வெலன்ரிம் என கின்னஸ் சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மரியா கோமஸின் வயது 114 வருடங்கள் 313 நாட்கள் ஆகும்.
உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக ஏற்கனவே கருதப்பட்ட அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தை சேர்ந்த பெஸி கூப்பரை விட மரியா கொம்ஸ் 48 நாட்கள் வயது கூடியவராவார்.
இவர் தினசரி காலை உணவாக பாணும் பழங்களும் உண்பதுடன் அவ்வப்போது வைன் பானம் அருந்துவதாகவும் அதுவே தனது நீண்ட ஆயுளின் இரகசியமெனவும் மரியா கோமஸ் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் மினாஸ் கெராயிஸ் மாநிலத்திலுள்ள கரங்கொலா நகரில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி மரியா கொம்ஸ் பிறந்துள்ளார்.
மரியா கோமஸின் தந்தையும் 100 வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1913 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்த மரியா கோமஸிற்கு ஒரு மகனும் 4 பேரப்பிள்ளைகளும் 7 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’