ம ட்டக்களப்பில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களின் கைது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இப்பேச்சுவாத்தை தொடர்பாக இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் அஸாத் மௌலானா,
கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
"இவர்களது விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது எனவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
எனினும் இனிமேல் இவ்வாறான கைதுகள் இடம்பெறாததுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யும் போது உயர் மட்டத்திற்கு அறிவித்துவிட்டே அது இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டது" என்றார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான பஸிஸ் ராஜபக்ஷ, அத்தாவுட செனவிரட்ன,சுசில் பிரேமஜெயந்த, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’