வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 மே, 2011

அனர்த்தங்களில் சிக்கிக்கொள்வோரை தேடி, காப்பாற்றுவதற்கு விசேட குழு

Fஅனர்த்தம் மற்றும் இதர அவசர சந்தர்ப்பங்களில் ஈடுபடுத்துவதற்காகவும் அனர்த்தங்களில் சிக்கிக்கொள்வோரை தேடிக் கண்டுபிடித்து அவர்களை காப்பாற்றுவதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஐந்து தேசிய சபைகளின் கூட்டம் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனர்த்தங்களில் சிக்கிக்கொள்பவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கான குழுவொன்று இலங்கையில் தற்போதில்லை, அதனால் அவரச நிலைமைகளின் போது ஈடுபடுத்துவதற்கென விசேட குழுக்களுக்கு பயிற்சியளித்து மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் பயன்படுத்துவது முக்கியமானதாகும் அத்துடன் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் சகலருக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய வலயமானது பல இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் வலயமாகும். இந்த வருடத்தில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளினால் மில்லியன் கணக்கானோர் அகதிகளாகினர். அதேபோல வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.
எச்சரிக்கையான வலயத்தில் வீடுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் சட்டங்களை நிறுவி அதனூடாக சில நிர்வாகத்தை ஏற்படுத்துவது அவசியமானதாகும். எவ்விதமான அவதானிப்புகளும் இன்றி நிர்மாணிப்பதன் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் சான்றிதழ்களும் விநியோகிக்கப்படவிருக்கின்றன.
அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை மென்மேலும் செயற்றிறனாக மாற்றும் வகையில் தேவைக்கேற்ப அனர்த்த முகாமைத்துவ சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
அனர்த்த எச்சரிக்கை முகாமைத்துவத்தின் மூலமாக பாதுகாப்பான இலங்கையை உருவாக்க முடியும் அதற்கான பாதையை முறையாக பகுப்பாய்ந்து எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை இனங்கண்டுகொள்ளவேண்டும். நாட்டில் தற்போது நிலவுகின்ற மிகமோசமான காலநிலை காரணமாக மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் அதனை அனர்த்த முகாமைத்துவ சபையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’