வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 மே, 2011

ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டார்

ல்கயீதா அமைப்பின் நிறுவநர் ஒசாமா பின் லாடன் அமெரிக்க சிறப்புப்படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். இந்த செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளைமாளிகையில் அறிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் அபோதாபாத் நகரில் பெரும் சுற்றுச்சுவர்களால் சூழப்பட்டிருந்த மாளிகையில் ஒசாமா பின் லாடன் இருந்ததை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்டுபிடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க ராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப்படைப்பிரிவைச்சேர்ந்த படையினர் நான்கு ஹெலிகப்டர்களில் அங்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒசாமா பின் லாடன் தலையில் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மகன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலின் போது ஹெலிகப்டர்களில் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அல்கயீதா தலைவரின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’