வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 1 மே, 2011

மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நாடு இலங்கையே: ஜனாதிபதி

யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சுமார் 300,000 மக்களை மீட்கும் நடவடிக்கையை ஐ.நா. முகவர் நிறுவனங்கள் எதிர்பார்த்ததைவிட அரசாங்கம் மனிதாபிமான ரீதியாகவும் கவனமாகவும் மேற்கொண்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கொழும்பு மாநகரசபைத் திடலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அதிக எண்ணிக்கையான மீட்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ஒரே நாடாக இலங்கை விளங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
'வரலாற்றில் எந்த நாடும் இவ்வளவு பாரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை. நாட்டின் சட்டபூர்வமான படைகளுக்கு எதிராக பேராடிய பெரும் எண்ணிக்கையான போராளிகளைக் காப்பாற்றி, அவர்களுக்கு புனர்வாழ்வளித்து, பல்கலைக்கழக மட்டம் வரையிலான கல்வியும் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளையும் அளித்து ஏன் திருமணம்கூட செய்துவைத்து அவர்களை சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் பிரஜைகளாக சமூகத்திற்கு அனுப்பி வைத்ததாக வேறு எந்த இராணுவமும் கூறமுடியாது.
இது இலங்கை கொண்டுள்ள தனிசிறப்புக்குரிய சாதனையாகும். இதைத்தான் சில குழுக்களும் அமைப்புகளும் போர்க் குற்றம் எனவும் மனித உரிமை மீறல்கள் எனவும் கூறுகிறார்கள்' என ஜனாதிபதி தெரிவித்தார்.
'இடம்பெயர்ந்த மக்களுக்காக 300,000 பேருக்கு போதுமான உணவுப்பொருட்களை அனுப்புமாறு உலக உணவுத் திட்டம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது. ஆனல் அரசாங்கம் 350,000 பேருக்குப் போதுமான உணவை அனுப்பியது. இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பியபின் அங்கு மேலதிகமாக இருந்த உணவுப்பொருட்களை அரசாங்கம் திருப்பிஎடுத்துக்கொண்டு வர வேண்டியிருந்தது' எனவும் அவர் கூறினார்.
சில ஆயிரம் டொலர்களுக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என சில அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஏனைய அமைப்புகளையும் கோருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’