ஈ ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இன்று (29) மதியம் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக சமகால அரசியல் சூழ்நிலை குறித்தும் போர்க்குற்றம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் தருஸ்மனின் அறிக்கை குறித்தும் மற்றும் அதன் உள்ளடக்கம் உண்மைத் தன்மைகள் என்பன குறித்தும் இது விடயமாக எந்த தீர்மானத்தை எடுப்பதால் தமிழ் பேசும் மக்களின் எதிர்கால வாழ்வுக்கு நன்மை பயக்கும் என்று பல்வேறு விடயங்களும் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது இந்திய அரசினால் முன்னெடுக்கப்படும் ஐம்பதினாயிரம் வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தி இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் வாழ்வியலை மேலும் அர்த்தமுள்ளதாக்குவது மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவுபடுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதோடு அதற்கு மேலதிக அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் ஏற்கனவே இந்திய இலங்கை அரசுகளால் இணக்கம் காணப்பட்டதும் ஈ.பி.டி.பி.யினால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருவதுமான இத்திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதை துரிதப்படுத்துவது போன்ற விடயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான இச்சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகவும் தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவும் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’