வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 மே, 2011

யாழ் மாவட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் நெல்சிப் திட்டத்திற்கான முதல்கட்ட நிதியாக 254 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.


பொ ருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மூன்றாண்டு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் நெல்சிப் திட்டத்திற்கு உலக வங்கியிடம் இருந்து கடனாக பெறப்பட்ட நிதியில் இவ்வருடத்திற்கான முதல் கட்ட நிதி ஒதுக்கீடு 254 மில்லியன் ரூபா யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுகிறது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (23) யாழ். இராமநாதன் கல்லூரியில் சுன்னாகம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இத் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அடிப்படை உட்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். அத்தோடு இத் திட்டமானது அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைக்குட்பட்ட மக்களின் முன்மொழிவுகள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள். இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு சொந்தமான 42.34 கிலோ மீற்றர்கள் நீளம் கொண்ட 33 வீதிகள் புனரமைக்கப்பட உள்ளதாகவும்;; தெரிவித்தார்.

மேலும் நெல்சிப் திட்ட வேலைகள் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற போது அந்தந்த பிரதேச மக்களும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளும் விழிப்பாக இருந்து வேலைத்திட்டங்களை அவதானித்து நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப நேர்த்தியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறதா என்பதனை கண்காணிக்க வேண்டும் என்றும் அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு என்பது இந்த முதற் கட்ட வேலைத்திட்டத்தின் வெற்றியிலேயே தங்கியுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’