சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சம்பந்தப்பட்டதாக பிரித்hனிய அதிகாரிகளால் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக ஆளுங்கட்சிநாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறியுள்ளார்.
அப்போது இராணுவத் தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தி கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயத்தின் பாதுகாப்பு பிரிவு குறிப்பொன்றை வழங்கியதாக பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பி.சி.சி. சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்
அதேவேளை, 'தேர்தல் வந்தவுடன் அவர்கள் (பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம்) அவரின் பக்கம் சார்ந்தனர். அவர்கள் எமக்கு தகவல்களை வழங்கவில்லை' என ரஜீவ விஜேசிங்க கூறினார்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கருத்துத் தெரிவிக்கையில் சண்டே லீடர் ஆசிரியர் கொலை தொடர்பாக கிடைக்கும் எந்த தகவலையும் இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ரஜீவ விஜேசிங்க எம்.பியின் தகவலை தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.
எனினும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு தாம் ஆதரவாக இருந்ததாக கூறுவதை பிரித்தானிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
அண்மையில் பிரித்தானிய ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில், லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் லங்கா ஈ நியூஸ் செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையென தெரிவித்திருந்தது.
இது குறித்து பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பதிலளிக்கையில், இக்கொலை தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார். எனினும் பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் அது அரசியல் பழிவாங்கல் என என அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் ஆபத்துள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்காக நாம் விசாரணையை நிறுத்தவும் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். அவர் இறந்தபின் வெளியான லசந்தவின் ஆசிரிய தலையங்கமொன்றில் 'நான் கொல்லப்பட்டால் அரசாங்கமே என்னை கொன்றிருக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’