பெ ரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் அண்ணன் கைது செய்யப்பட்டார்
.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் அண்ணன் கலியபெருமாள் மீது வாக்காளர்களுக்கு பணம் கொடு்தததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் லெப்பைகுடிகாடு, எறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருக்கையில் கையும், களவுமாக பிடிபட்டார்.
அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
முன்னதாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது மட்டுமல்லாமல், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சுயேச்சை வேட்பாளரின் காரைப் பயன்படுத்தியதாகவும் கலியபெருமாள் மீது வழக்கு் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமயைன்று அவர் எறையூர் அருகே உள்ள மனோன்மணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும், கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாக தேர்தல் அதிகாரிக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து அங்கு போலீஸ் படை விரைந்தது. ஆனால் அதற்குள் கலியபெருமாள் தனது காரை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது. மேலும், சுயேச்சே வேட்பாளரான ரவிச்சந்திரன் என்பவரது காரில் கிளம்பினார்.
போலீசார் நடத்திய சோதனையில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா படம் பொறித்த காலண்டர்களும், டைரிகளும் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கலியபெருமாள் மீதும், கார் டிரைவர் அக்பர் என்பவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்கையில் கையும், களவுமாக சிக்கினார்.
ராமநாதபுரம் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.2.83 லட்சம் பறிமுதல்:
ராமநாதபுரம் மாவட்டம் திமுக பிரமுகர் என்.ஏ.ஷேக் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ. 2.83 லட்சம் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் திமுக பிரமுகர் என்.ஏ.ஷேக். அவர் தேனி மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமாக ராமநாதபுரம் மற்றும் மதுரையில் ஹோட்டல்கள் இருக்கின்றன. அவர் மத்திய அமைச்சர் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’