வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 ஏப்ரல், 2011

அமெரிக்க மனித உரிமை அறிக்கைக்கு சீனா கண்டனம்

னைய நாடுகளை பவீனப்படுத்துவதற்காகவே அமெரிக்கா இணைய சுதந்திரம் பற்றி அக்கறை காட்டுகின்றதென சீனா குற்றஞ்சாட்டியுள்ளது
.
இரகசியங்களை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு எதிரான அமெரிக்காவின் பிரசாரம், சுதந்திரமான தகவல் பாய்ச்சல் விடயத்தில் அதன் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்துவதாக சீனா கூறியுள்ளதென யூ.எஸ்.ஏ.ருடே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வீடில்லாப் பிரச்சினை, வன்முறை குற்றச்செயல்கள், அரசியலில் பணத்தின் செல்வாக்கு, அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையால் சிவிலியன்கள் மோசமாக பாதிக்கப்படுதல் என்னும் விடயங்களில் அமெரிக்காவை சீனா கண்டித்துள்ளது.
அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் உலக மனித உரிமை நிலைவரம் பற்றிய தனது அறிக்கையில் பேச்சு சுதந்திர இணையம் ஆகியவற்றை சீனா கட்டுப்படுத்துவதாக கூறியுள்ளதை கண்டித்தே சீனா தனது நீண்ட கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மாற்றுக் கருத்துடையோருக்கு எதிரான நடவடிக்கையாக சித்திரக் கலைஞரும் வெய்வெய் உட்பட பலரை சீனா தடுப்புக்காவலில் வைத்திருப்பதாக அமெரி;க்கா குற்றஞ்சாட்டியது.
ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மனித உரிமைகள் பிரச்சினையை சாட்டிக்கொண்டு தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென சீனா அமெரிக்காவுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக் யுத்தங்கள் தொடர்பிலான பல்லாயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ ஆவணங்களையும் இராஜதந்திர இரகசிய கேபிள்களையும் வெளியிட்ட விக்கிலீக்ஸ் மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.
விக்கிலீக்ஸுக்கு இரகசியத் தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பிறாட்லி மானிங் என்றும் அமெரிக்க இராணுவச் சிப்பாய் தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’