இ லங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
போர்க்காலத்தில் ஒவ்வொரு சம்பவங்கள் நடக்கும்  போதும் அவற்றை தாம் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது பதிவு செய்துள்ளதாகக்கூறும்  இரா.சம்பந்தன், தாம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய சம்பவங்களை நிபுணர்குழு  விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 
 
இனப் பிரச்சனைக்கு நியாயமான  தீர்வு காண்பதற்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை  அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்த தாம் உதவியதாக தமிழ் தேசியக்  கூட்டமைப்பு கூறுகின்றது. 
 
 
ஐநா குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்துள்ள சாராம்சங்களை இலங்கையில் சில நாளிதழ்கள்  அண்மையில் வெளியிட்டிருந்தன. 
இந்த நிலையில் குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள தகவல்ககளை  நிபுணர் குழு சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து எடுத்துள்ள தீர்மானங்களே என  தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத்  தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கம் அதிலுள்ள விடயங்களை புறந்தள்ளாது ஆக்கபூர்வமான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறினார். 
 ![]()  | |
| 'அமைதிப் பேச்சுக்களுக்கு உதவினோம்' - சம்பந்தர் | 
ஐநாகுழுவின் கசிந்துள்ளதாகக் கூறப்படும் இறுதி அறிக்கை  சாராம்சங்களில், இலங்கை அராங்கத்துக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்களும்  விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளதாக  சம்பந்தன் தெரிவித்தார். 
 ![]()  | |
| 'இராணுவத் தீர்வை ஆதரிக்கவில்லை'-சம்பந்தர் | 
இதேவேளை, விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டக்  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அவர்களை ஆதரித்த கட்சி என்ற வகையில், சுயவிமர்சனம்  ஒன்றை செய்துகொள்ளவும் நீங்கள் தயாரா என்ற கேள்விக்கு, தாம் பேச்சுவார்த்தைகளில்  இருதரப்புக்கும் பாலமாக செயற்பட்டார்களே தவிர, இராணுவ ரீதிய தீர்வினை ஒருபோதும்  ஆதரிக்கவில்லையெனவும் இரா. சம்பந்தன் தமிழோசைக்குத் தெரிவித்தார். 

  














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’