வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அமெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிக்கின்றது: ரஜீவ விஜேசிங்க

மெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிக்கின்றது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரிகள் திணைக்களத்தால் மனித உரிமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழினவாதத்தை பரப்புவதாக அமைந்துள்ளது.


ஆனாலும் பாதிப்புக்குள்ளாகியோரென வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் அதிகம் சிங்களவர்களின் பெயர்களே காணப்படுகிறது.
இராஜதந்திரிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் அறிக்கையானது அரசியல் நோக்கம் கொண்டதாகவே நான் காண்கின்றேன் என ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து உலக நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அமெரிக்க இராஜதந்திரிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனாதிபதியின் குடும்ப ஆதிக்கம் என்ற கருத்து சிறுபிள்ளைத்தனமானது.
நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியின் சகோதரர் நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்டமை தவறென்றால் வாக்களித்தவர்கள் முட்டாள்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் சிறந்த சேவையை ஆற்றி வருகிறார் என ரஜீவ விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவும்இ ஆதாரங்களையுடைய மனித உரிமை மீறல்களுக்கு விசாரணைகள் மூலம் தீர்வு வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’