வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இலங்கை சிறைகளிலுள்ள இந்திய கைதிகள் இந்தியாவுக்கு மாற்றம்

போ தைப்பொருள் வைத்திருந்த விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சுமார் 43 இந்தியர்கள் தமது எஞ்சிய தண்டனைக் காலத்தை இந்திய சிறைகளில் கழிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் கைதிகள் இடமாற்றம் தொடர்பாக 9 மாதங்களுக்குமுன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு இணங்க இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'இதற்கான விண்ணப்பங்கள் கைதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவ்விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு மீண்டும் எமக்கு கிடைத்தவுடன் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு தண்டனையை அனுபவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி விசாரணைகளை எதிர்நோக்கும் கைதிகள் இடமாற்றப்பட மாட்டார்கள். இதனால் 43 கைதிகளில் 3 பேர் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்துவைக்கப்படலாம்.
'நாம் எமது பணிகளை பூர்த்திசெய்துவிட்டோம். பொருத்தமான கைதிகள் குறித்து இலங்கை அதிகாரிகள், எமக்கு அறிவிப்பதற்காக நாம் காத்திருக்கிறோம்' என இந்திய உயர் ஸ்தானிகரலாய அதிகாரி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’