போ லியான கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மீளப்பெற்ற இலங்கையர்கள் இருவர் இந்தியாவின் மங்களகிரி நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தனி பிள்ளை நிமல்ராஜ், களிட்ஸன் டினோ ஆகியோரே இந்நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னையில் வசிக்கும் இந்நபர்கள் ஹைதராபாத்தைச்சேர்ந்த வினீல் சந்த்ரா என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து 160,000 ரூபாவை மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் பணம் எதையும் மீளப்பெறாத போதிலும், தனது கணக்கு மீதி குறைவடைந்துள்ளமை தொடர்பாக வங்கி நிர்வாகத்திற்கு வினீல் சர்மா புகாரிட்டபோதே இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி நபர்கள் இருவரும் ஸ்கிம்மிங் தொழில்நுட்பம் மூலம் போலியான கடன் அட்டைகளை தயாரித்து, மங்களகிரி நகரிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பயன்படுத்தியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
மலேஷியாவைச் சேர்ந்த சுதன் என்பவர் மூலம் இந்த ஸ்கிம்பிங் தொழில்நுட்பத்தை இவர்கள் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சுதனை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் அத்தியட்சகர் ஏ. ரவிசந்திரா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’