இ லங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டம் பற்றிய ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை எவ்வித திருத்தமும் இன்றி விரைவில் வெளியிடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
 
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்ததின் இறுதிக் கட்டத்தில்  நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்  மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்த பல்வேறு  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக  அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதன் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம்  குற்றஞ்சாட்டுகிறது. 
நிபுணர் குழுவுக்கு ஐ.நா. குழு என்ற அந்தஸ்து வழங்கப்படக்கூடாது  என்ற நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா வெளியிடக்கூடாது என்று இலங்கையின்  வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டுவருகிறார். 
இந்த நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை  எவ்வித திருத்தங்களும் இன்றி கூடுதல் விரைவில் வெளியி்டவுள்ளதாக ஐ.நா.  அறிவித்துவிட்டது. 
இலங்கை அரசாங்கத்தின் பதிலையும் பெற்றுக்கொண்டே அறிக்கையை  வெளியிடவேண்டும் என்பதே ஐ.நா.வின் எண்ணம் என தலைமைச் செயலர் பான் கீ மூனின்  பேச்சாளரன பர்ஹான் ஹக் அறிவித்துள்ளார். 
நிபுணர்குழு அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்கள், போரின்  இறுதிக்கட்டங்களின்போது, அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பொதுமக்களுக்கு எதிராக  அட்டூழியங்களைப் புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அவை தொடர்பில்  சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளன. 
இலங்கை இலங்கை அரசாங்கத்தின் பதில் கிடைக்கும்வரை ஐ.நா.  நீண்டகாலம் காத்திருக்காது என்பது தெரிகிறது. 

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’