ஐ .நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மே தினத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அம்மாகாணங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
மேற்படி அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வர் என சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் முரளிதரன் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
யுத்தம் முடிந்துள்ள நிலையில் சகவாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த வாய்ப்பிருப்பிருக்கிறது. எனினும் சில சக்திகள் இதை குழப்ப முயற்சிக்கின்றன என அவர் கூறினார்.
'அரசாங்கம் மீது ஐ.நா. மேற்படி குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு அடிப்படையில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் யுத்தகாலத்தில் மனிதாபிமானத்திற்கு எதிராக அதிக போர்க் குற்றங்களை இழைத்துள்ளனர்' என அவர் தெரிவித்தார்.
600 தமிழ் மக்கள் புலிகளால் எவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரட்னம் விளக்கியுள்ளார் எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
2009 மே மாதம் யுத்தம்முடிவுற்றபின் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவுக்கு வந்த முன்னாள் எம்.பி. கனகரட்னம் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’