வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஏப்ரல், 2011

கலிங்கப்பட்டியில் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டார் வைகோ

லிங்கப்பட்டி: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

இந்த சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் மதிமுகவினரின் வாக்குகள் யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார் வைகோ. காலை ஓட்டுப்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு
வந்த வைகோ ஓட்டு போட வரிசையில் காத்திருந்தார். பின்னர் தனது வாய்ப்பு வந்ததும் அவர் உள்ளே சென்று ஓட்டுப் போட்டார்.
ஓட்டுப் போட்ட பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. ஆனாலும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் அதை முறையாக செய்துள்ளேன் என்றார்.
தான் யாருக்கு வாக்களித்துள்ளேன் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

'சித்திரைத் திருநாள் கண்ணீரைத் துடைக்கட்டும்':

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நெருப்பாகத் தகிக்கும் அனல் வெயிலோடு தொடங்கும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் வழக்கம், தமிழ்நாட்டு மக்களிடம் தொடர்ந்து வருகிறது. மதுரை மூதூரில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கிறது.
சித்திரைத் திங்களில் முழுநிலவு நாளில், காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் கடற்கரையில் கூடி, இந்திர விழா கொண்டாடியதாக, சிலப்பதிகாரம் கூறுகிறது.
இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவீசும் விடிவெள்ளியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த திருநாளாகிய ஏப்ரல் 14 ஆம் நாளில், சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற வகையில், சாதி, மத பேதங்கள் இல்லாத சகோதரத்துவம் தழைக்க, தமிழக மக்கள் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’