வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு

ஐ. நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் இன்று அறிவித்தள்ளது.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் மே தினம், போர்க் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நடத்த வேண்டுமென்ற சர்வதேச கோரிக்கைகளுக்கு எதிராக எமது வலிமையை வெளிப்படுத்துவதற்கான தினமாக அமைய வேண்டுமென கூறியுள்ளார்.
'இவ்வளவு நாள் எமது வலிமையை நாம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் மே தினத்தில் நாம் எமது வலிமையை வெளிப்படுத்துவோம்' என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில் போர்க் குற்றங்களும் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றதான நம்பத் தகுத்த குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி மேற்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையின்படி நாட்டை பிளவுபடுத்துவதற்கு தான் அனுமதிக்காததால் சர்வதேச சமூகத்தில் ஒரு பகுதியினர் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வதுடன் பொறாமை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் புதியதல்ல, போருக்குத் தலைமை தாங்கியவர்கள் போர்க்குற்ற விசாரணை மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென அதிகமானோர் கூறியிருந்தனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
' நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமர வலியுறுத்தப்பட்டாலும் நான் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன்' எனவும் ஜனாதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’