ஈ ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் அரசாங்க தரப்பிலான உயர்மட்டக் குழுவினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இன்று (29) மாலை கொழும்பில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன் போது தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்து வரும் நாளாந்த பிரச்சினைகள் குறித்தும் தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான நிரந்தரமானதும் கௌரவமானதும் ஆரோக்கியமானதுமான தீர்வு குறித்தும் விரிவாகவும் ஆரோக்கியமான வழிமுறையிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் சட்டத்தரணி ரெங்கன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார் ஈ.பி.டி.பி.யின் நிர்வாகச் செயலாளர் அ.இராசமாணிக்கம் அவர்களும் அரச தரப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, ஜி.எல்.பீரிஸ். பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜீவ விஜேசிங்க சஜின் த வாஸ் குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’