வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

இந்தியாவின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. அறிக்கை _

க்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் தருஷ்மன் அறிக்கை வெளியீடானது இந்திய நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அந்நாட்டின் அபிமானத்தை சீர் குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. பிராந்தியத்திலேயே ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. எனவே இது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்கவேண்டியுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன. அந்த பேச்சுவார்த்தைகளிலும் ஸ்தம்பித நிலையை ஏற்படுத்தும் வகையில் தருஷ்மன் அறிக்கை அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் தருஷ்மன் அறிக்கை வெளியீட்டை நாம் மிகவும் ஆழமாக பார்க்கவேண்டியுள்ளது. அதாவது இதனை வெறுமனே விட்டுவிட முடியாது. மேலும் இந்த அறிக்கையை காரணம் காட்டி அரசாங்கம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுடன் முரண்பட்டுக்கொள்ள விரும்பவில்லை.
காரணம் இந்த அறிக்கையானது இலங்கை எனும் நாட்டுக்கே சவால் விட்டுள்ளது. அது தொடர்பிலேயே நாங்கள் சிந்திக்கவேண்டியுள்ளது. மேலும் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடான இந்திய நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அந்நாட்டின் அபிமானத்தை சீர் குலைக்கும் வகையிலும் இந்த தருஷ்மன் அறிக்கை அமைந்துள்ளது.
எனவே இதனை வெறுமனே விட்டுவிட முடியாது. இந்தியõ என்பது எம்முடன் உயர்ந்த உறவைக்கொண்டுள்ள தொரு பெரிய ஜனநாயக நாடாகும். அந்த நாட்டின் அபிமானத்துக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. இதன் மூலம் ஒரு உள்நோக்கம் மற்றும் சதி விடயம் தெளிவாகின்றது. அதாவது இந்திய நாட்டையும் இந்த அறிக்கை குறி வைத்துள்ளது என்று கூறலாம்.
இதேவேளை அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன. பல சுற்று பேச்சுக்கள் முடிவடைந்துவிட்டன. மேலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளிலும் ஸ்தம்பித நிலையை ஏற்படுத்தும் வகையில் தருஷ்மன் அறிக்கை அமைந்துள்ளது. அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கருத்து வெளியிடுகையில் :
ஐ.நா. செயலாளர் நாயகம் அமைத்த நிபுணர் குழுவை நாங்கள் ஒருபோதும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை. நாங்கள் அழைப்பு விடுத்ததõக எதிர்க்கட்சியினர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அதனை எதிர்க்கின்றோம். அதேவேளை இந்த குழுவின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதலளித்ததாக கூறுவதிலும் எந்த உண்மையும் இல்லை என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’