த மிழ் மக்களுக்கான அரசியல் உரிமைப்பிரச்சினைகளுக்கு நடைமுறை சாத்தியமான விதத்தில் எமது நிரந்தரத் தீர்வு காணப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வவுனியா மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய தலைமைப் பணிமனையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் சுதந்திரமாகப் பேச நடமாட தொழில் செய்யக் கூடிய சந்தர்ப்பம் தோன்றியுள்ளதாகவும் இச்சூழலைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரையும் சார்ந்ததென்றும் சுட்டிக் காட்டிய அவர் கடந்த கால அரசியல் தலைமைகள் விட்ட தவறுகள் காரணமாகவே எமது மக்கள் இழப்புக்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
சரியான தெரிவு தெளிவான அரசியலினூடாகவே மக்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் உரிய வகையில் தீர்வுகாண முடியும்.
நடைமுறைக்குச் சாத்தியமான விதத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் நாம் என்றென்றும் உறுதியாக இருக்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல் வவுனியா பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தால் இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம் முன்னுரிமை அடிப்படையில் கணினிகள் சங்கக் கட்டிடம் அமைந்துள்ள காணிப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை ஏனைய தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பிரதான நுழைவாயிலிருந்து பிரதம விருந்தினர் உள்ளிட்டோர் மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடியினை அமைச்சர் அவர்கள் ஏற்றி வைத்தார்.
புதிய தலைமைப் பணிமனையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் மங்கள விளக்குகளும் ஏற்றி வைக்கப்பட்டன.
வவுனியா பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத் தலைவர் அன்ரனிதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பிரதேச செயலர் சிவபாதம் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஞானசம்பந்தர் வடமாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கிறிஸ்ரி ஜோசப் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உரையாற்றினர்.
பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் அங்கு உரையாற்றும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறந்த வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த மற்றும் பெண்களை குடும்பத் தலைவர்களாகவுள்ள குடும்பங்களுக்கு பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் பனை அபிவிருத்தி சபையினூடாக முன்னெடுக்கப்படும்.
அதன் ஒரு கட்டமாக நெடுங்கேணி மற்றும் றம்பைக்குளம் பகுதிகளில் வாழும் பெண்களில் ஒரு தொகுதியினருக்கு வாழ்வாதாரத் திட்டத்திற்கான தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான தொழில் விருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்தலைமைப் பணிமனையூடாக அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவச கணினி வகுப்புகள் சிறுவர் சேமிப்புத் திட்டம் மற்றும் தையல் வகுப்புகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் சங்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்காக உழைத்த முன்னைநாள் தலைவர்கள் துறைசார்ந்தோரால் மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வவுனியா மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத் தலைவர் அன்ரனிதாஸால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ரவீந்திரநாதன் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பொதுமுகாமையாளர்கள் ஈ.பி.டி.பி.யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரகு உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’