வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஏப்ரல், 2011

நண்டு வளர்ப்புத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார்!

ர்காவற்துறை கரம்பனில் அமைந்துள்ள நண்டு வளர்ப்புத் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கரம்பன் பகுதிக்கு இன்று (12) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் அங்குள்ள நண்டு வளர்ப்புத் திட்டத்தை பார்வையிட்டதுடன் அது தொடர்பாக துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இத்திட்டத்தில் தற்போது 400க்கும் மேற்பட்ட நண்டுக் குஞ்சுகள் வளர்க்கப்படுவதாகவும் இதன்மூலம் எதிர்காலத்தில் பெருமளவு இலாபத்தை ஈட்ட முடியும் என்றும் திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள மரியாம்பிள்ளை தவம் தெரிவித்துள்ளார்.
இந்நண்டு வளர்ப்புத் திட்டத்திற்கான பல்வேறு உதவித் திட்டங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’