வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஏப்ரல், 2011

பலாத்காரமான புதுவரு கொண்டாட்டம் யாழில் இல்லை: மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க

யா ழ். நகரில் பலாத்காரமான முறையில் புதுவருட கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு படையினர் மக்களை வற்புறுத்திய வருவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையினை யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மறுத்துள்ளார்.

இது தொடர்பாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவிக்கையில்...
'யாழ். நகர் இப்பொழுது சுமூகமாக இயங்கி வருகிறது. இதனை குழப்புவதற்கும் வெளிநாட்டினர் மத்தியில் படையினர் பற்றிய தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதற்கும் சில அரசியல்வாதிகள் தீவிர முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதேபோன்றதொரு சூழ்ச்சியினைத்தான் ஆனந்தசங்கரி அவர்களும் இப்பொழுது மேற்கொண்டிருக்கிறார்.
யாழில் புதுவருட கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு இராணுவத்தினர் ஒருபோதும் எவரையும் வற்புறுத்தவில்லை. யுத்தத்தில் புறையோடிபோயிருந்த சமூகம் இப்பொழுதுதான் புத்தெழுச்சி பெற்றுவருகிறது. களியாட்டங்களில் மக்கள் சுதந்திரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் யாழ். மக்களின் சந்தோஷத்திற்காக பாடுபடுகின்ற இராணுவத்தினரின் மனதினைப் புண்படுத்தும் வகையில் ஆனந்தசங்கரியின் அறிக்கை அமைந்திருந்தமை மனவருத்தத்தை தருகிறது.
மஹிந்த ஹத்துருசிங்கவுக்கு முகவரியிட்ட கடிதம் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே ஊடகங்களுக்கு அவ்வறிக்கையை ஆனந்தசங்கரி வழங்கியிருக்கிறார். இது எம்மீது பழிசுமத்தும் ஒரு முயற்சியாகும். ராஜதந்திர கடிதங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக ஊடகங்களுக்கு வழங்குவதன் மூலம் தன்னுடைய இருப்பை தக்கவைக்க இதுபோன்ற சில அரசில்வாதிகள் முனைகின்றார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.
'யாழில் நடைபெறுகின்ற சித்திரைப் புத்தாண்டு களியாட்டங்களில் அனைத்து மக்களும் எந்தவித பயமுமின்றி கலந்துகொள்ள முடியும். அவர்களின் சந்தோஷத்திற்கு இராணுவத்தினர் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள்' என்றும் மேலும் கருத்துத் தெரிவித்தார் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’