வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

லண்டனில் 5வயது தமிழ்ச்சிறுமி துஷா மீது துப்பாக்கி சூடு நடத்திய 19வயது இளைஞர் கைது…!!!

தெற்கு லண்டன் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான பலசரக்கு கடை ஒன்றில் வைத்து துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேகநபர்களில் ஒருவரான 19வயது இளைஞர் ஒருவரை லண்டன் நகர காவல்துறையினர் வியாழன் பிற்பகல் கைது செய்துள்ளனர்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சியை காவல்துறையினர் பெற்று விசாரணை நடத்தியதையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 5வயது சிறுமியான துஷா கமலேஸ்வரன், கடைஉரிமையாளரான 35வயதுடைய ரொசான் செல்வகுமார் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமி துஷாவிற்கு நெஞ்சில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும் எனினும் இப்போது அச்சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிசிரிவி கமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சியில் கைது செய்யப்பட்ட நபரை தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இருப்பதாக விசாரணை நடத்தி வரும் குற்றத்தடுப்பு காவல்பிரிவின் பிரதம பரிசோதகர் ரொனி பௌக்ரொன் தெரிவித்தார்.
இத்துப்பாக்கி சூட்டை நடத்;திய நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 50ஆயிரம் பவுண் சன்மானமாக வழங்கப்படும் என ஏற்கனவே லண்டன் காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
இத்துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உள்ளதாகவும் லண்டன் குற்றத்தடுப்பு பிரதம பரிசோதகர் ரொனி பௌவ்டன் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுமி கடை உரிமையாளரின் உறவினர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டன் நகர குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணைகளிலிருந்து ஏனையவர்களையும் கைது செய்வதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஏனைய நால்வரும் தற்போது தலைமறைவாகி இருக்கின்றனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’