வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

206 முன்னாள் போராளிகள் விடுதலை

வுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 206 பேர் இன்று வெள்ளிக்கிழமை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்

வவுனியா நகர மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பி.டபிள்யூ.கொடிப்பிலி, அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின்போது பாதுகாப்புபடையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் அவர்களை சமூகத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றதாக பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்
விடுதலையானவர்களுடைய நடன நிகழ்வும் நடைபெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’