வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 மார்ச், 2011

'பேச்சுவார்த்தைப் பங்காளராக' செயற்படுவதற்கு தயார் : சொல்ஹெய்ம்

லங்கையில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசியல் தீர்வை காண்பதற்குமான ஒரே வழி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் விசேட சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இடையில், பேச்சுவார்த்தைப் பங்காளராக செயற்படுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களை கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசியபோது எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளதாக நோர்வே நியூஸ் தெரிவித்துள்ளது.
பல அமைப்புகள் இச்சந்திப்பில் பங்குபற்றியதாகவும் நோர்வே நியூஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை தொடர்பான நோர்வேயின் கொள்கை குறித்து அறிவதற்காகவும் தற்போதைய நிலைமை குறித்த தமது அவதானிப்புகளை வெளிப்படுத்தவும் இச்சந்திப்பை மேற்படி தமிழ் அமைப்புகள் கோரியிருந்தன.
தமிழ் குழுக்கள் கூறுவதை செவிமடுப்பது சொல்ஹெய்ம் பிரதான கவனம் செலுத்திய விடயமாக இருந்தது. இலங்கையில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசியல் தீர்வை காண்பதற்குமான ஒரே வழி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே என் சொல்ஹெய்ம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், பேச்சுவார்த்தைப் பங்காளராக செயற்படுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறினார். எனினும் நெடியவன் குழுவினர் இந்த யோசனையை நிராகரித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’