வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 மார்ச், 2011

உள்ளூர் வளங்களின் மூலம் சிறந்த உற்பத்தியை பெருக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

ள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சிறந்த உற்பத்திகளைப் பெருக்குவதுடன் தனிநபர் மற்றும் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு பத்தரமுல்லை ஜனகலா கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற கைவினைப்பொருட்கள் போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் துறைசார்ந்த நிபுணர்களின் கலைத்திறன்களை மேம்படுத்தும் அதேவேளை மேலும் புதியவர்களை தேசிய அருங்கலைகள் பேரவையின் பல்வேறு செயற்திட்டங்கள் ஊடாக வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும்.

அந்த வகையில் இவ்வாறான பயிற்சித் திட்டங்கள் மூலம் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தரமான கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

இதன் மூலம் சுயபொருளாதாரத்தை மட்டுமல்லாமல் கிராமியப் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.

அதற்கேற்ப தரமான மூலப் பொருட்களைக் கொண்ட உற்பத்திகள் ஊடாக சிறந்த சந்தை வாய்ப்பினையும் பெற்றுக்கொடுப்பதற்கும் எமது அமைச்சு தயாராகவுள்ளது.

மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் இவ்வாறான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவும் இவ்வாறான அருங்கலைகளை அழிய விடாது பாதுகாப்பதற்கும் தொடர்ந்தும் பங்காற்றுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்வில் பிரதம விருந்தினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்ட குழுவினர் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கினையும் ஏற்றி வைத்தனர்.

அங்கு தேசிய அருங்கலைகள் பேரவை பணிப்பாளர் பூலோகசிங்கம் வரவேற்புரை ஆற்றும் போது மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறந்த தலைமைத்துவத்துடனும் வழிநடத்தலுடனும் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான செயற்திட்டங்கள் மூலமான உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடியதான வழிவகைகளையும் அமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் 51பேருக்கு பல்வேறு துறைசார்ந்த கைவினைப் பொருட் தயாரிப்பு தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் எதிர்காலங்களில் இத்திட்டத்தின் மூலம் மேலும் பல பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு பயிலுனர்களின் தொகையினை 100ஆக அதிகரிப்பதற்கு எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் தேசிய அருங்கலைகள் சபையின் தலைவர் புத்திகீர்த்திசேன ஆகியோரும் அங்கு உரையாற்றினார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய அருங்கலைகள் பேரவையின் அனுசரணையுடன் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறியில் சிற்பம் மரவேலை பற்றிக் பனைசார் உற்பத்திகள் மற்றும் தோல்சார் உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

நியமனப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் மார்ஷல் ஜனதா உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.




















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’