சேத்தாங்குளம் சந்தி முதல் மாதகல் துறை வரையிலான கடலோரப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்துவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன் வலித்தூண்டல் இறங்குதுறைப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான பகுதியையும் விஸ்தரிக்க அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று நேற்றைய தினம் சேத்தாங்குளம் இளவாலை வலித்தூண்டல் ஆகிய பகுதிகளுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதிகளை ஆராய்ந்ததுடன் பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
இதன் பிரகாரம் அப்பகுதிகளைச் சார்ந்த மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க யாழ் கடற்படை கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை 7ம் திகதி முதல் சேத்தாங்குளம் சந்தியிலிருந்து மாதகல் துறை வரையிலான கடலோரப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
அப்பகுதி சார்ந்த ஏனைய இடங்களில் தற்போது மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில் அவ்விடங்களிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’