வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 5 மார்ச், 2011

கடாபிக்கு இன்டர்போல் எச்சரிக்கைநோட்டீஸ் விடுத்துள்ளது

லிபிய ஜனாதிபதி கடாபியை கண்காணிக்கும் வகையில் சர்வதேச அமைப்புகளை தயார்நிலையில் வைத்திருப்பதற்கு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது இன்டர்போல்.


இததேவேளை லிபியாவில் கடாபிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் கிழக்கு நகரான அஜ்டாபியாவில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் திரிப்போலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வீதியில் கோஷம் எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர். இதை தடுக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். போராட்டங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
லிபியாவுக்கு தலைமை வகிக்கும் தார்மீக உரிமையை கடாபி இழந்துவிட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’