கி
ளிநொச்சி அம்பாள்குளம் சந்தையினை தம்புள்ள மாதிரியிலான பொருளாதார மையமாக மாற்றுவது தொடர்பாகவும் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்படவுள்ள நுகர்வுச்சந்தை தொடர்பாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்மொழிவுகளை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று ஈ.பி.டி.பி பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் நேற்று (2) கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) கிளிநொச்சியில உள்ளூர் உற்பத்திகளை மொத்தமாக விற்பனை செய்யும் ஒரு சந்தையாக அம்பாள்குளம் சந்தையினை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்படவுள்ள நுகர்வுச்சந்தையின் மாதிரி அமைப்பு தொடர்பிலும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்மொழிவுகள் ஆராயப்பட்டதோடு இவை தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏழாம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் தலைமையில் இடம்பெறும் சந்திப்பில் மேற்;கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு தற்போது சந்தையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரிகளுக்கே வியாபார நிலையங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலுக்கு கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி அரச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் திருமதி அருட்சோதி ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’