யாழ் வேலணை சைவப்பிரகாச வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாடசாலை சமூகத்தினரால் விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதையடுத்து மங்கல விளக்கேற்றல் இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடி பாடசாலை இல்லக் கொடியேற்றலைத் தொடர்ந்து பாடசாலைக் கீதம் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து மாணவர்களின் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கல்லூரி முதல்வர் நாவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஈ.பி.டி.பி. வேலணை பிரதேச அமைப்பாளர் சிவராசா போல் வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க களஞ்சியப் பொறுப்பாளர் தர்மராஜேந்திரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஓட்டம் அஞ்சலோட்டம் உட்பட பல விளையாட்டுகள் நடைபெற்றன. இடைவேளை நிகழ்வாக மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் பாடசாலைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் அப்போதுதான் அந்த பாடசாலை கல்வியிலும் சரி இதர செயற்பாடுகளிலும் சரி நல்ல பெறுபேறுகளை வெளிப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
பல்வேறு புத்திஜீவிகளையும் துறைசார்ந்த அறிவாளிகளையும் உருவாக்கிய தீவகத்தின் கல்வித்தரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை விருந்தினர்கள் வழங்கிக் கௌரவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’