வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 மார்ச், 2011

பழிக்கு பழி -விஜய் கோபம் : படவிழாவில் பரபரப்பு

சென்னையில் இன்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,
‘’ அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே கட்சி ஆரம்பித்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டார். ஆகையால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு’’ என்றார்.
இப்படத்தின் நாயகன் நடிகர் சத்யராஜ் பேசும்போது, ’’சிவாஜி அப்படி ஆகிவிட்டார் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எம்.ஜி.ஆர். வரவில்லையா. அதுபோல் விஜய் அரசியலுக்கு வருவார்.
பேசவே தயங்கும் நடிகர்கள் மத்தியில் தம்பி விஜய் நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாது செய்துவிடுவோம் என்று கோபப்பட்டார்.

அந்த கோபம்தான் எங்களுக்கு வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘’ஒரு கொலைக்கு ஒரு லட்சம் பேர் என்று கொன்றுவிட்டீர்கள். அப்படியானால் ஒரு லட்சம் கொலைக்கு....நீங்கள் பழி வாங்கியதுபோல் நாங்கள் பழி வாங்கவேண்டாமா?’’ என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’