பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பிலுள்ள அமைச்சர் அவர்களின் இல்லத்தில் இன்று இரவு நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பாகவும் இதனால் தாம் நாளாந்தம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பாகவும் இதனை தடுத்து நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றை ஆராய்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே தாம் இந்திய மற்றும் தமிழக அரச தரப்பினரிடம் தெரியப்படுத்தி இருந்ததையும் இப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வினை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஏழு பேர் கொண்ட இந்தியக் குழுவினர் தற்போது இலங்கைக்கு வருகை தந்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ள நிலையில் அவர்களிடம் உங்களது பிரச்சினைகளை எடுத்து விளக்கி சாதகமான முடிவை எட்டுவதற்கான நிலைப்பாட்டை பெற்றுக்கொள்வதே சிறந்த வழி எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் உதயன் ஆகியோரும் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’