வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 மார்ச், 2011

வைகோவை மீறி சுயேட்சையாக களமிறங்கும் மதிமுகவினர்!

தே: ர்தல் புறக்கணிப்பிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தாலும், கட்சியில் பலரும் சுயேட்சைகளாகப் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.

நேற்று இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார் வைகோ. விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: முதல்வர் கருணாநிதி, திமுக கூட்டணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே?

வைகோ: நான் எந்த அறிக்கையையும் படிக்கவில்லை. என் சொந்த கிராமத்துக்கு சென்று விட்டு, இப்போது வந்து கொண்டிருக்கிறேன். அந்த அறிக்கையை நான் படிக்க வாய்ப்பில்லை.

கேள்வி: அறிக்கையை படித்து விட்டு, முதல்வரை சந்திப்பீர்களா?

வைகோ: கடந்த சனிக்கிழமை மதிமுக ஆட்சி மன்றக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதைத்தவிர, வேறு எதுவும் நான் பேச விரும்பவில்லை என்றார்.

முன்னதாக தேர்தல் புறக்கணிப்பில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கலிங்கப்பட்டியில் தொண்டர்கள் மத்தியில் வைகோ தெரிவித்தார்.

வைகோ பாளையங்கோட்டையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு வந்தார். அங்கு உடல் நலமில்லாத அவரது தாய் மாரியம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் சொந்த ஊரான கலி்ங்கப்பட்டிக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு துக்க வீ்ட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.

அங்கு கூடிய கட்சி தொண்டர்களிடம் பேசுகையில், மதிமுக நிலைப்பாடு குறித்து தனியார் தொலைக்காட்சியில் விபரமாக பேசிவிட்டேன். கடந்த 2001ம் ஆண்டில் திருச்சியில் நடந்த மதிமுக மாநாட்டில் நிறைவேறறப்பட்ட தீர்மானத்தின்படி இன்று இயற்கையாகவே நடந்து விட்டது. தமிழகத்தில் இனி திமுக, அதிமுக வுக்கு மாற்றாக மதிமுக அமையும்.

இந்த முறை மதிமுக தேர்தலில் போட்டியிடாமல் வெளியில் இருந்து கவனிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

சுயேட்சையாக போட்டியிட மதிமுகவினர் ஆர்வம்:

அதி்முக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதை அடுத்து பாளை தொகுதியில் முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் சுயேட்சையாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மதிமுக தலைவர் வைகோ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தொண்டர்கள் விரும்புகின்றனர். இது குறித்து சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மதிமுக தொண்டர்கள் கட்சி தலைமைக்கு கடிதம் மற்றும் பேக்ஸ் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பாளை தொகுதியில் கட்சியின் முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் கேஏஎம் நிஜாமை சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இது குறித்து நிஜாமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

அதிமுக கூட்டணியில் பாளை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர் பார்த்தோம். அதிமுக தலைமை எங்களை நிராகரித்து விட்டது எங்களுக்கு மனவருத்ததை அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவுடன் இணைந்து நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தோம். பாளை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு அதிகமாக உள்ளது. நான் கடந்த 20 ஆண்டுகளாக பாளை தொகுதியில் இருந்து கட்சிக்கு அப்பாற்ப்பட்டு பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறேன். என்னை போட்டியிடுமாறு தொண்டர்கள் வலிபுறுத்தி வருகின்றனர் என்றார்.

மாவட்ட இளைஞரணி மதிமுக செயலாளர் ரமேஷ் கூறும்போது, சிறுபான்மையினர் அதிகம் உள்ள பாளை தொகுதியில் நிஜாமை சுயேட்சையாக போட்டியிடுமாறு விலியுறுத்தி வருகிறோம் என்றார். இதே போல வைகோவின் முடிவை விரும்பாத கட்சியினர் பலர் சுயேட்சையாக களம் இறங்க முயற்சிக்கிறார்கள்.

முடிவை மறுபரிசீலனை செய்ய திருப்போரூர் ஒன்றிய ம.தி.மு.க. தீர்மானம்:

இந் நிலையில்
தேர்தல் புறக்கணிப்பு முடிவை, தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்போரூர் ஒன்றிய ம.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய ம.தி.மு.க. கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.பி.பலராமன் தலைமை தாங்கினார்.

அதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்,
1.வருகிற 2011 சட்டமன்ற தேர்தலில், கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க. எடுத்த முடிவை எதிர்த்து ம.தி.மு.க. முடிவு செய்துள்ள எதிர்ப்புணர்விற்கு மதிப்பளிப்பதோடு, தொண்டர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேர்தல் புறக்கணிப்பு முடிவை தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2. கழகத்தின் உறுதிப்பாட்டையும், கட்டுக்கோப்பையும், வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் அதிகார போக்கை கண்டிக்கும் விதமாக, அ.தி.மு.க. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் ம.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

3. வருகிற சட்டமன்ற தேர்தலில் கழக தோழர்கள் எந்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்ற தெளிவான கருத்தினை ம.தி.மு.க தலைமை கழகம் விளக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிவராமன் உள்ளிட்ட ம.தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’