வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 மார்ச், 2011

'இராணுவ நீதிபதிகளிடம் குறிப்பு இல்லை'

மு ன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையின் போது எழுத்து மூலக் குறிப்புகள் எதனையும் வைத்திருக்க வில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ஹை கோர்ப் நிதி மோசடி வழக்கு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இலங்கை இராணுவத்தின் சட்ட அதிகாரி நீதிமன்றத்துக்கு இந்த தகவலை அறிவித்தார்.
ஹைகோர்ப் நிதி மோசடி வழக்கில் இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாம் விசாரணை அமர்வு நீதிபதிகள், சரத் பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளதால், அதே குற்றச்சாட்டின் கீழ் கொண்டுவரப்புட்டுள்ள இந்த மேல்நீதிமன்ற வழக்கு விசாரணையிலிருந்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று பொன்சேகா தரப்பு சட்டத்தரணி முன்னதாக ஆட்சேபமொன்றை முன்வைத்திருந்தார்.
அந்த ஆட்சேபம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குறித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகளின் எழுத்துக் குறி்ப்புக்களை சமர்பிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி கடந்த விசாரணையின் போது இராணுவ தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் குறிப்புகளை வைத்திருக்க வில்லையென இன்று செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் இராணுவ சட்ட அதிகாரி கூறியதை அடுத்து, சரத்பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய விதம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக பொன்சேகா தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தின் முன்னிலையில் வாதிட்டார்.
இந்த விடயங்களை கருத்தில் எடுத்த நீதிபதி சரத்பொன்சேகாவை மேல்நீதிமன்ற விசாரணையிலிருந்து விடுவிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை மே 4ம் திகதி அறிவிப்பதாக கூறினார்.
தனது மருமகன் தனுன திலகரட்ணவுக்குச் சொந்தமான ஹைகோர்ப் கம்பனியிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்த போது டெண்டர் விதிமுறைகளை மீறி, இராணுவத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா மீது குற்றஞ் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’