தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் தான் ரோஷக்காரர் இல்லை என்பதை காட்டிவிட்டார் என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் சேருவாரா அல்லது திமுக கூட்டணியில் சேருவாரா என்ற கேள்விக்குறிய நிலை இருந்தபோது நிருபர்களிடம் பேசிய அழகிரி, 'விஜயகாந்த் ரோஷக்காரர். அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரமாட்டார் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று மதுரையில் அழகிரியை சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முத்தையா பசும்பொன் சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும் மதுரை மாவட்ட அதிமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரத்னா தனது ஆதரவாளர்களுடன் அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அழகிரி,
வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக கூட்டணி தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்தில் இயங்குவது போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை எடுத்து விட்டால் என்ன ஆகும்?, கதை முடிந்து விடும்.
ஏப்ரல் 13ம் தேதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள் அதிமுகவின் வென்டிலேட்டரை அகற்றி விடுவார்கள். அந்தக் கூட்டணியில் சேர்ந்ததன் மூலம் விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் விஜயகாந்த் படாத பாடு படுவார். ஜெயலலிதாவுடன் சேர்ந்ததற்கான பலனை அவர் அனுபவிப்பார்.
தென்மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக யார்- யார்? தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார்கள்?
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நெப்போலியன், நடிகர்கள் வடிவேல், பாக்யராஜ், நடிகை குஷ்பு ஆகியோர் தென் மாவட்டங்களில் பிரச்சாரத்துக்கு வருகிறார்கள். தென் மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளுக்கும் நான் நேரடியாக சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு உற்சாகம் அளிப்பேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
தேர்தலில் திமுக வெற்றி பெற வியூகம் வகுத்து தர உள்ளேன் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’