இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி மோஷே கட்ஸாவிற்கு பாலியல் வல்லுறவு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
65 வயதான கட்ஸாவ், 2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஜுலை வரை இஸ்ரேலிய ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
இவர் 1998 ஆம் ஆண்டு, இஸ்ரேலிய சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, அமைச்சின் பெண் உத்தியோகஸ்தர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கட்ஸாவ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் ஜனாதிபதியாக பதவி வகித்த போது 2003, 2005 ஆம் ஆண்டுகளில் இரு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு சுமார் ஒரு வருட காலமாக நடைபெற்றது. கடந்த டிசெம்பர் மாதம் கட்ஸாவ் குற்றவாளியாக காணப்பட்டார்.
அதையடுத்து, கட்ஸாவிற்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் இஸ்ரேலிய ஷெக்கல்ஸ் (சுமார் 31 லட்சம் இலங்கை ரூபா) நஷ்ட ஈடும் ஏனைய இரு பெண்களுக்கு 25,000 ஷெக்கல்ஸ் நஷ்ட ஈடும் கட்ஸாவ் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"வல்லுறவு குற்றமானது ஒரு நபரின் ஆத்மாவை சேதப்படுத்துகிறது. இந்த குற்றத்தின் குரூரம் காணமாக இதற்கான தண்டனை தெளிவாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். பிரதிவாதி ஏனையோரைப் போல குற்றமிழைத்துள்ளார். அவர் இதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும். எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர்" என டெல் அவிவ் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
ஈரானைப் பிறப்பிடமாகக் கொண்ட மோஷே கட்ஸாவ், மே மாதம் 8 ஆம் திகதி முதல் சிறைத்தண்டனை அனுபவிக்க ஆரம்பிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’