வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 மார்ச், 2011

கிழக்கு முதலமைச்சர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக யோகேஸ்வரன் எம்.பி புகார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் எழுத்து மூலம் புகாரிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 20ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கார் கதவு கண்ணாடியை கீழ் இறக்கி நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனை சுடுவதாக சைகை மூலம் எச்சரிக்கை விடுத்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்திலும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனக்கு எச்சரிக்கை விடுத்துடன் தனது மாமாங்கம் பிரதேச தேர்தல் அலுவலகம் முதலமைச்சர் தலைமையில் வந்த ஒரு குழுவினரால் உடைக்கப்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிடப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’