வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 மார்ச், 2011

தொழில் முயற்சி முகாமையாளர்களுக்கான நியமனங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்குக் கீழான கைதொழில் அபிவிருத்திச் சபையினது செயல் திட்டங்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புதிதாக தொழில் முயற்சி மேம்பாட்டு முகாமையாளர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளார்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமைச்சர் அவர்களின் கொழும்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிற்கு கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் செயற்திட்டங்களை மகிந்த சிந்தனையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு தொழில் முயற்சி மேம்பாட்டு முகாமையாளர் தரம் 5 பதவிக்காக ஒன்பது பேர் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
இதன் பிரகாரம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவர்களுடாக அந்தந்த மாவட்டங்களில் துறைசார்ந்த பல்வேறு தொழில் துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இன்றைய நியமனப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் அவர்களுடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’