லண்டனில் சட்டவிரோதமான முறையில் கடன் வழங்கும் தொழில் செய்துவந்த இலங்கையர் ஒருவர், அதன் மூலம் சுமார் 500,000 பவுணிலும் கூடுதலான பணம் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஈஸ்ட்ஹாம் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான க.நடராஜா என்பவரே இந்த சட்டவிரோத கடன்வழங்கல் தொழிலில் ஈடுபட்டவரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் ஆவார்.
இவர் தங்க நகைகளை பொறுப்பாக பெற்றுக்கொண்டே கடன்களை வழங்கினாரென நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவருக்கு உதவியாக வே.ஜெகந்திரபோஸ் என்பவரும் செயற்பட்டுள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நடராஜாவிடம் கடன் வாங்கிய ஜனகமோகன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத கடன் குழுவும் பொலிஸாரும் நடராஜாவின் வீட்டை சோதனையிட்டபோது ஏராளமான தங்க நகைகளும் சட்டவிரோத கடன்கள் பற்றிய விவரங்களும் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோதமாக கடன் வழங்கியமை, குற்ற வழியில் பணம் சேர்த்தமையென இரண்டு குற்றச்சாட்டுகள் நடராஜா மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’